முகமலர்ந்து கொடுப்பவரை கர்த்தர் நேசிக்கிறார்

உற்ச்சாக  மனதுடனே கொடுத்திடுவோம்

 

1.

வரத்தத்தோடல்ல கட்டாயத்தாலல்ல‌

இருப்பதை விருப்பமுடன், கொடுத்திடுவோம்

விதை விதைத்திடுவோம் அறுவடை செய்வோம் – முகமலர்ந்து

 

2.

அதிகமாய் விதைததால், அதிக அறுவடை 2 கொரி 9:6

ஏழ்மை நிலையிலிருந்து இன்றே விடுதலை

அளவின்றி கொடுத்து, செல்வர்களாவோம்

அமுக்கி குலுக்கி ம்டியில் அளந்து போடுவார்     – முகமலர்ந்து

 

3.

ஏழைக்கு இரங்கி கொடுக்கும் போதெல்லாம்

கர்த்தருக்கு கடன் கொடுத்து திரும்ப பெற்றிடுவோம்

எந்த நிலையிலும் தேவையானதெல்லாம்

எப்போதும் நமக்கு தந்திடுவாரே      – முகமலர்ந்து

 

4.

நற்செயல் செய்ய வேண்டிய அனத்தும்

மிகுதியாகவே தந்திடுவாரே

எல்லா நன்மைகளால் நிரப்ப வல்லவர்

குறைகளை நிறைவாக்கி நடத்திடுவார்  – முகமலர்ந்து



mukamalarnththu kodubpavarai karthdhar nesikkirar

urssaka  manathutane koduththiduvom

 

1.

varathdhaththotalla kaddayaththalalla‌

irubpathai virubpamutan, koduththiduvom

vithai vithaiththiduvom aruvadai seyvom – mukamalarnththu

 

2.

athikamay vithaidhathal, athika aruvadai 2 kori 9:6

eezmai nilaiyilirunththu inre vidudhalai

alavinri koduththu, selvarkalavom

amukki kulukki mdiyil alanththu boduvar     – mukamalarnththu

 

3.

eezaikku irangki kodukkum bothellam

karthdharukku katan koduththu thirumpa berriduvom

enthdha nilaiyilum thevaiyanathellam

ebbothum namakku dhanththiduvare      – mukamalarnththu

 

4.

narseyal seyya vendiya anaththum

mikuthiyakave dhanththiduvare

ella nanmaikalal nirabpa vallavar

kuraikalai niraivakki nataththiduvar  – mukamalarnththu